Total Pageviews

Thursday, May 31, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தடை கோரி வழக்கு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு, தடை கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர் பாதுகாப்பு சங்கத் தலைவர் பீட்டராயன், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் அணுமின் நிலையத்திற்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காற்று மாசடைவதை தடுக்க, வாரியம் நிறைவேற்ற சொன்ன 48 நிபந்தனைகளை நிறைவேற்றாததால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று தரவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று ,பெற்ற பின்னரே எரிபொருள் நிரப்பப் வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Friday, May 25, 2012

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

1) இலங்கை அரசுக்கு எதிராக ஆரம்பித்த போரை ''18 நாடுகளுக்கு எதிராக'' நடத்திமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது,
2) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனமான போரை'' எதிர்கொள்ள நேரிட்டது,
3) ''சர்வதேச சமூகம் திரை மறைவில் நடத்திய சதி''.யை சந்திக்க வேண்டியிருந்தது,
4) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவு'',
5) ''இந்தியா இரசாயன ஆயுதங்களை வழங்கி'' யுத்த மரபுகளை மீறி போராளிகளையும் பொதுமக்களையும் கொன்றொழித்தது,
6) உள் இருந்த ''துரோகிகளின் காட்டிக் கொடுப்பு'' .
7) இவையனத்தையும் தனித்து நின்று எதிர்த்து வன்னியின் கடைசித் தளமும் எதிரியின் கையில் வீழாது தடுக்க நாம் இறுதிவரை போராடினோம்.
8) இருந்தாலும் பின்னடைந்தோம், பின்னடைவிலும் சாதுரியமாக பின்வாங்கினோம், மீண்டும் எழுவோம் தொடர்ந்தும் போராடுவோம்.
9) இந்த இடைக் காலத்தில் போராட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு புலம் பெயர் தமிழர்களுடையது.
10) தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இதுவே இந்த இரகசிய ஆவணம் சொல்லும் செய்தியாகவுள்ளது.தான் கவனயீனமாக இருந்த நேரத்தில் கற்பழிக்கப் பட்டுவிட்டேன் எனச்சொல்லும் எந்தப்பெண்ணையும் சமூகம் மன்னிக்காது என மாபெரும் ஆசான் கார்ல் மார்க்ஸ் கூறியிருக்கிறார்.
ஏகாதிபத்தியத்தின் சிறகுச் சூட்டுக்குள் தேசக் குஞ்சுகளைப் பொரிக்கலாம் என நம்பிய குட்டி முதலாளித்துவ தேசியவாதம் இப்போது வைக்கும் ஒப்பாரி இது.
தமிழீழ மக்களுக்கும், விடுதலைப் புலிக் கட்சிக்கும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகள் தலைமை வகுத்தளித்த திட்டம், அதற்கு நேர் எதிர் முரணான வழியில் நடந்தேறியிருப்பதையே இங்கே காணுகின்றோம்.இதையே இந்தச் சித்திரம் சோகச் சுமையுடன் சிறப்புற விளக்குகிறது.எந்த மக்களின் புரட்சிகரப் போராட்டங்களும் தமது நியாயத்தை விஞ்ஞான அடித்தளத்தில் நிலை நிறுத்த வரலாற்று அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.தமிழீழப் புரட்சிப் போருக்கு அந்த அவகாசம் ஆக அறுபது வருடங்களாக குறுகியதற்கு முதல் மரியாதை பெறவேண்டிய பெரு மனிதர் தமிழீழ தேசியத் தளபதி பிரபாகரன் அவர்களே.( அயர்லாந்தையும், பாலஸ்தீனத்தையும் நினைவில் கொண்டு பாருங்கள்).
இனி எழுந்து வரும் புதிய தமிழ்ப் புலிகள்:
1) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனத்தை'', ஏகாதிபத்தியவாதிகள் தேசிய சுதந்திரத்தின் எதிரிகள் என உரைப்பார்களாக!
2) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவை'', இந்திய விஸ்தரிப்புவாத அரசின் வர்க்க நலனாக கண்டு கொள்வார்களாக!
3) துரோகத்துக்கான சமூக அடிப்படை வர்க்க நலனே என்பதை அங்கீகரிப்பார்களாக!
4) புதிய ஜனநாயக தமிழீழ மக்கள் ஜனநாயக குடியரசமைக்க புரட்சிகர மக்கள் யுத்தப் பாதையில் அணிதிரள்வார்களாக!.
5) தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
6) உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!!

சட்டவிரோத படுகொலைகளே இலங்கையின் பிரதான மனித உரிமை மீறலாக அமைந்துள்ளது – அமெரிக்கா

சட்டவிரோத படுகொலைச் சம்பவங்களே இலங்கையின் பிரதான மனித உரிமை மீறல்களாக அமைந்துள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களினால் இவ்வாறு சட்டவிரோத படுகொலைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
 
2011ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
படையினரால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் அரசியல் ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை அடிப்படையில் தமது பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது என்பதனை இந்த அறிக்கையின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகவும் சொற்பளவிலான உத்தியோகத்தர்களையே இலங்கை அரசாங்கம் தண்டித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தி;ன் போது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
காவல்துறையினரின் சித்திரவதைகள், ஊழல் மோசடிகள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என பல்வேறு உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், பரவலாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சட்டவிரோத மற்றும் பலவந்தமான கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான சில சம்பவங்களுடன் அரசாங்கத்தைச் சார்ந்தோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கைச் சிறைச்சாலைகளில் சனநெரிசல் காணப்படுவதாகவும், போதியளவு வசதிகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
காவல்துறையினர் திட்டமிட்ட வகையில் நபர்களை கைது செய்து துன்புறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Thursday, May 17, 2012

World No.1 Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News - Dinamalar


தமிழ் ரோஜா: வருக வணக்கம்

தமிழ் ரோஜா: வருக வணக்கம்: எனது புதிய தமிழ் ரோஜா வலைப்பூக்கு வருகை தந்தவர்களையும் வர இருப்பவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன். என்றும் அன்புடன் ரோஜா அருணன். ...