Total Pageviews

Friday, May 25, 2012

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

1) இலங்கை அரசுக்கு எதிராக ஆரம்பித்த போரை ''18 நாடுகளுக்கு எதிராக'' நடத்திமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது,
2) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனமான போரை'' எதிர்கொள்ள நேரிட்டது,
3) ''சர்வதேச சமூகம் திரை மறைவில் நடத்திய சதி''.யை சந்திக்க வேண்டியிருந்தது,
4) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவு'',
5) ''இந்தியா இரசாயன ஆயுதங்களை வழங்கி'' யுத்த மரபுகளை மீறி போராளிகளையும் பொதுமக்களையும் கொன்றொழித்தது,
6) உள் இருந்த ''துரோகிகளின் காட்டிக் கொடுப்பு'' .
7) இவையனத்தையும் தனித்து நின்று எதிர்த்து வன்னியின் கடைசித் தளமும் எதிரியின் கையில் வீழாது தடுக்க நாம் இறுதிவரை போராடினோம்.
8) இருந்தாலும் பின்னடைந்தோம், பின்னடைவிலும் சாதுரியமாக பின்வாங்கினோம், மீண்டும் எழுவோம் தொடர்ந்தும் போராடுவோம்.
9) இந்த இடைக் காலத்தில் போராட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு புலம் பெயர் தமிழர்களுடையது.
10) தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இதுவே இந்த இரகசிய ஆவணம் சொல்லும் செய்தியாகவுள்ளது.தான் கவனயீனமாக இருந்த நேரத்தில் கற்பழிக்கப் பட்டுவிட்டேன் எனச்சொல்லும் எந்தப்பெண்ணையும் சமூகம் மன்னிக்காது என மாபெரும் ஆசான் கார்ல் மார்க்ஸ் கூறியிருக்கிறார்.
ஏகாதிபத்தியத்தின் சிறகுச் சூட்டுக்குள் தேசக் குஞ்சுகளைப் பொரிக்கலாம் என நம்பிய குட்டி முதலாளித்துவ தேசியவாதம் இப்போது வைக்கும் ஒப்பாரி இது.
தமிழீழ மக்களுக்கும், விடுதலைப் புலிக் கட்சிக்கும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகள் தலைமை வகுத்தளித்த திட்டம், அதற்கு நேர் எதிர் முரணான வழியில் நடந்தேறியிருப்பதையே இங்கே காணுகின்றோம்.இதையே இந்தச் சித்திரம் சோகச் சுமையுடன் சிறப்புற விளக்குகிறது.எந்த மக்களின் புரட்சிகரப் போராட்டங்களும் தமது நியாயத்தை விஞ்ஞான அடித்தளத்தில் நிலை நிறுத்த வரலாற்று அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.தமிழீழப் புரட்சிப் போருக்கு அந்த அவகாசம் ஆக அறுபது வருடங்களாக குறுகியதற்கு முதல் மரியாதை பெறவேண்டிய பெரு மனிதர் தமிழீழ தேசியத் தளபதி பிரபாகரன் அவர்களே.( அயர்லாந்தையும், பாலஸ்தீனத்தையும் நினைவில் கொண்டு பாருங்கள்).
இனி எழுந்து வரும் புதிய தமிழ்ப் புலிகள்:
1) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனத்தை'', ஏகாதிபத்தியவாதிகள் தேசிய சுதந்திரத்தின் எதிரிகள் என உரைப்பார்களாக!
2) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவை'', இந்திய விஸ்தரிப்புவாத அரசின் வர்க்க நலனாக கண்டு கொள்வார்களாக!
3) துரோகத்துக்கான சமூக அடிப்படை வர்க்க நலனே என்பதை அங்கீகரிப்பார்களாக!
4) புதிய ஜனநாயக தமிழீழ மக்கள் ஜனநாயக குடியரசமைக்க புரட்சிகர மக்கள் யுத்தப் பாதையில் அணிதிரள்வார்களாக!.
5) தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
6) உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!!

No comments:

Post a Comment